விளையாட்டு செய்திகள்

விளையாட்டு செய்திகள்

img

2025-01-21

சாம்பியன்ஸ் டிராபி: ஜடேஜாவுக்கு பதிலாக அவரை தேர்வு செய்திருக்கலாம் – இந்திய முன்னாள் வீரர்

துபாயில் ஸ்பின்னர்களுக்கு அதிக உதவி கிடைக்காது என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் 19-ம் தேதி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களும் , முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளன. இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையிலான அந்த அணியில் சிராஜ் இடம் பெறாதது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. மேலும் அந்த அணியில் ஜடேஜா, அக்சர், வாஷிங்டன் […]

img

2025-01-21

19 வயதுக்குட்பட்ட 20/20 மகளிர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷூக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி

முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 9 விக்கட் இழப்புக்கு 91 ஓட்டங்களை பெற்றதுடன் பதிலளித்தாடிய அவுஸ்திரேலிய அணி 19.2 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.இதேவேளை, நைஜீரியா முதல் தடவையாக 19 வயதுக்குட்பட்ட 20/20 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் தனது வெற்றியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் நைஜீரியா டக்வர்த் லுயிஸ் விதுமுறையில் 2 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.13 ஓவர்கள் மட்டுப்படுத்தப்ப்ட இந்த போட்டியில் நைஜீரியா 6 விக்கெட்டுக்களை இழந்து […]

img

2025-01-21

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்த இந்திய வீரர் பட்டையை கிளப்புவார்.. கங்குலி கணிப்பு

கொல்கத்தா : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதம் அடித்த பிறகு அடுத்த நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் ரன்கள் சேர்க்க முடியாமல் அவர் தடுமாறுவதை பார்த்த போது தமக்கு ஆச்சரியமாக இருந்ததாக முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார். விராட் கோலியை ஒருநாள், டி 20 போட்டியில் கேப்டன் பதவியில் இருந்து விலக கங்குலி அறிவுறுத்தி இருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி தான் கேப்டனாக இடம்பெற வேண்டும் என்று கங்குலி நீண்ட காலமாக […]

img

2025-01-20

26 பந்தில் மேட்ச்சை முடித்த இந்திய அணி.. உலகக்கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ்-ஐ கதற விட்ட மகளிர் படை

கொலாலம்பூர்: 2025 அண்டர் 19 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் தனது முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி சாதனை வெற்றியை பெற்று இருக்கிறது. வெறும் 26 பந்துகளில் சேஸிங்கை முடித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய மகளிர் அணி. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இந்த தொடரின் குரூப் சுற்று போட்டியில் மோதின. குரூப் ஏ பிரிவில் இடம் பெற்று இருந்த இந்திய அணியின் முதல் போட்டியும் […]

img

2025-01-20

“சச்சின், சச்சின்” 13 ஆண்டுகளுக்கு பின் விண்ணை முட்டிய கோஷம்.. நெகிழ்ந்த டெண்டுல்கர்.. வான்கடே விழா

மும்பை: மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தின் 50 வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்றார். அவர் மேடைக்கு வந்த போது மைதானம் முழுவதும் நிரம்பி இருந்த ரசிகர்கள் “சச்சின், சச்சின்” என கோஷம் எழுப்பினர். 13 ஆண்டுகளுக்கு முன் இதே வான்கடே மைதானத்தில் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்று இருந்தார். அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் அவருக்கான புகழ் இம்மி அளவும் குறையாததை இந்த நிகழ்வு உணர்த்தியது. […]

img

2025-01-20

கார் எல்லாம் அனுப்ப முடியாது.. 2 பஸ் தான் அனுப்புவோம்.. பிசிசிஐ கறார்.. இந்திய வீரர்களுக்கு அழுத்தம்

கொல்கத்தா: பிசிசிஐ தனது புதிய கட்டுப்பாடுகளை இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்தே அமல்படுத்த தொடங்கி விட்டது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜனவரி 22 அன்று துவங்க உள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டிக்கு முன்னதாக இந்திய வீரர்கள் கொல்கத்தாவில் வலைப் பயிற்சி செய்து வருகின்றனர். முதல் நாள் வலைப் பயிற்சியின் போது அனைத்து இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களும் இரண்டு பேருந்துகளில் அழைத்து […]

img

2025-01-20

கோ கோ உலகக் கோப்பை: இறுதிக்கு முன்னேறியது இந்திய ஆண்கள், பெண்கள் அணி

டெல்லியில் கோ கோ உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. இந்திய பெண்கள் அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது. புதுடெல்லி:தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள இந்திராகாந்தி விளையாட்டரங்கில் கோ கோ உலகக் கோப்பை 2025 அரையிறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது.இதில் இந்திய பெண்கள் அணி, தென் ஆப்பிரிக்காவுடன் மோதியது.இதில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய இந்திய பெண்கள் அணி 66-16 என்ற புள்ளிக்கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.மற்றொரு அரையிறுதிப் போட்டியில் இந்திய ஆண்கள் […]

img

2025-01-20

நோமன் அலி அபாரம்: வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 137 ரன்னில் ஆல் அவுட்

பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 230 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 137 ரன்னில் சுருண்டது. முல்தான்:பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.இதன் முதலாவது டெஸ்ட் போட்டி முல்தானில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. பனிமூட்டம் காரணமாக ஆட்டம் தொடங்குவதில் சிறிது கால தாமதம் ஆனது. முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் 41.3 […]

img

2025-01-20

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ரிபாகினா, மேடிசன் கீஸ் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் வென்றார். சிட்னி:ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.இதற்கிடையே, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 3வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 6 வீராங்கனையும், கஜகஸ்தானைச் சேர்ந்தவருமான எலினா ரிபாகினா, உக்ரைனின் டயானா […]

img

2025-01-17

இந்திய ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறிய சாத்விக்-சிராக் ஜோடி

உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள கே.டி.ஜாதவ் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, ஜப்பானின் ஹிரோகி ஒகமுரா-மிட்சுஹாஷி ஜோடியை எதிர்கொண்டது.

img

2025-01-17

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 3வது சுற்றுக்கு முன்னேறினர் ஜோகோவிச், அல்காரஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் வெற்றி பெற்றார்.

img

2025-01-17

உலகிலேயே மாபெரும் ரெக்கார்டு.. வரலாறு படைத்த கீரான் பொல்லார்ட்.. கெயில் ரெக்கார்டை எட்டினார்

துபாய்: வெஸ்ட் இண்டீஸ் வீரர் கீரான் பொல்லார்ட் மாபெரும் உலக சாதனை ஒன்றை படைத்து இருக்கிறார். கிறிஸ் கெயில் மட்டுமே செய்து இருந்த மாபெரும் மைல்கல் சாதனை ஒன்றை கீரான் பொல்லார்ட் இரண்டாவது வீரராக செய்து வியக்க வைத்து இருக்கிறார். 2025 இன்டர்நேஷனல் லீக் டி20 (ILT20) கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வருகிறது. அந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்கும், டெசர்ட் வைப்பர்ஸ் அணிக்கும் இடையேயான போட்டி நேற்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் […]