2025-02-09
நாட்டை விட்டு வெளியேறுவதற்கு ஒன்லைனில் பூர்த்தி செய்ய வேண்டிய வெளியேறும் அட்டையை இலங்கையர்கள் அணுக முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிரஜைகள் தங்கள் வருகை மற்றும் புறப்பாடு அட்டைகளை அதன் வலைத்தளத்தின் மூலம் பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பை வழங்கியிருந்தது.இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான தொடர்புடைய அட்டையை நிரப்பும்போது விண்ணப்பதாரரின் கையடக்க தொலைபேசி இலக்கத்தை உள்ளிட வேண்டும். பின்னர் அந்த கையடக்க தொலைபேசிக்கு ஒரு OTP இலக்கம் அனுப்பப்படும். இருப்பினும், […]
2025-02-09
வறுமை நிலை தொடர்பில் எவ்வித புரிதலும் இன்றி அஸ்வெசும திட்டத்தின் வெற்றி குறித்து எவ்வாறு தீர்மானிக்க முடியும்? வறுமையை ஒழிப்பதற்கு முன்னர் காணப்பட்ட திட்டங்களை விட அஸ்வெசும சிறந்ததெனக் கூறுவதை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.‘எதிர்காலத்துக்கான பட்ஜெட்’ என்ற தொனிப்பொருளில் நேற்றைய தினம் (07.02.2025) கொழும்பில் (Colombo) இடம்பெற்ற மாநாடொன்றில் கலந்து கொண்ட போதே எதிர்க்கட்சி தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார.இதன்போது கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் […]
2025-02-09
நாட்டின் பல அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விடயத்தை லங்கா சதோச நிறுவனம் (Lanka Sathosa Company) தெரிவித்துள்ளது.இதனடிப்படையில், இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசியின் விலை ரூபா 208 என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, நாட்டரிசியின் விலை குறைக்கப்பட்டுள்ள விலை ரூபா 219 என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக பொருட்களின் விலைகள் குறைப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.அத்தோடு, இந்த ஆண்டு (2025) ஜனவரி மாத இறுதி வாரத்தில், 2024 ஜனவரி மாத […]
2025-02-09
நாட்டில் அண்மைய நாட்களில் தேங்காய் விலை வேகமாக உயர்ந்து வருவதால் மக்கள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனர்.இந்நிலையில் தென்னை பயிர்ச்செய்கையை விரிவுபடுத்துவதற்காக கப்ருக நிதி முகாமை சபை ஒன்றியம் மறுசீரமைக்கப்படும் என்று தெங்கு பயிர்ச்செய்கை சபை (Coconut Development Authority) தெரிவித்துள்ளது.இவற்றில் ஒரு மில்லியன் மரங்கள் வடக்கு தென்னை முக்கோண வலயத்திற்கு அருகில் நடப்படும் என்று அதன் தலைவர் வைத்தியர் சுனிமல் ஜயக்கொடி தெரிவித்துள்ளார். அதன்படி, இந்த செயல்முறையின் முதல் திட்டம் கம்பஹா மாவட்டத்தில் எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக […]
2025-02-09
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பான விசாரணையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு சட்டமா அதிபர் புதிய உத்தரவை பிறப்பிக்க உள்ளார்.எனினும் இந்த உத்தரவு குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்று கொழும்பின் ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.முன்னதாக, லசந்த விக்கிரமதுங்கவின் வாகன ஓட்டுநரை கடத்திச் சென்று சாட்சியங்களை அழித்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களை விடுவிக்குமாறு சட்டமா அதிபர் பரிந்துரை செய்திருந்தார். எனினும் இது குறித்து பொதுமக்கள் மத்தியில் எழுந்த கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து […]
2025-02-09
ஜனாதிபதியின், க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் எதிர்வரும் 5 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்ற உறுதியை வழங்கமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(08.02.2025) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,” நாடு முழுவதும் 1,740 கிலோமீற்றர் கடற்கரையைச் சுத்தம் செய்யும் பணியின் ஆரம்ப நிகழ்வு இடம்பெறவுள்ளது.இந்நிகழ்வு, க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ், “அழகான கடற்கரை […]
2025-02-09
மட்டக்களப்பு, காத்தான்குடி கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது அலைகளால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பாடசாலை மாணவன் காணாமல்போயுள்ளார்.குறித்த சம்பவம் நேற்று(08.02.2025) இடம்பெற்றுள்ளது. காத்தான்குடி நூறாணியா வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி பயிலும் சாமில் சனாஹி என்ற மாணவனே இவ்வாறு காணாமல்போயுள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2025-02-09
வாந்தி எடுத்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.யாழ்.தாவடி தெற்கு, கொக்குவிலைச் சேர்ந்த திரவியம் சிறிதரன்(வயது 53)என்ற ஒரு பிள்ளையின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இ.போ.சபையின் கோண்டாவில் சாலையில் சாரதியாகக் கடமையாற்றும் அவர் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை காலை சாலைக்கு வேலைக்குச் சென்றபோது தலைச்சுற்று ஏற்பட்டதன் காரணமாக வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் வீட்டில் வாந்தி எடுத்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் மாலை அங்கு உயிரிழந்துள்ளார். இந்த மரணம் தொடர்பில் […]
2025-02-09
நாங்கள் யாரையும் அரசியல் ரீதியாக பழிவாங்க விரும்பவில்லை. நாங்கள் யோஷித ராஜபக்சவைக் கைது செய்தபோது, சமூக ஊடகங்களில் ஏராளமான பொய்யான கதைகள் உருவாக்கப்பட்டன என்று நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், சட்ட மா அதிபர் கூறுவது போல் ஒரு நபர் மீது குற்றம் சாட்டப்படுவதற்கு முன்பு, அவர் முதலில் சந்தேகநபராக பெயரிடப்பட வேண்டும். ஒருவரைக் கைது செய்யாமல் சந்தேக நபராகப் பெயரிட முடியாது. யோஷித ராஜபக்ச […]
2025-02-09
இலங்கைக் (Sri Lanka) கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கடற்தொழிலில் ஈடுபட்ட நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட இந்திய கடற்தொழில் படகுகள் மற்றும் உபகரணங்கள் என்பன பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்தில் நேற்று (08) காலை பகிரங்க ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளன.வல்வெட்டித்துறை கடற்பரப்பில் வைத்து கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் திகதி 4 இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறைப் பொலிஸாரால் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்று வந்தது. […]
2025-02-09
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது இளைய மகன் பாலச்சந்திரன் உயிரிழந்த செய்தி கேட்ட முன்னாள் ஜனாதிபதியும் எனது தந்தையுமான மகிந்த ராஜபக்ச மிகவும் மன வருத்தம் அடைந்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.சமூக ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தெரிவிக்கையில்,பிரபாகரனின் மகனது மரணச் செய்தி அதிகாலையில் கிடைக்கப்பெற்றது. இந்தச் செய்தியைக் கேட்டு எனது தந்தை மிகவும் மனவருத்தம் அடைந்தார். எனது தந்தை மிகவும் […]
2025-02-08
ஓய்வுபெற்ற சாரதிகள் மற்றும் நடத்துனர்களை மீண்டும் சேவையில் இணைக்க இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன இதனை தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த தீர்மானம் ஊழியர்கள் பற்றாக்குறையை தீர்க்கும் விதமாக எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதன்படி 65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சாரதிகள் மற்றும் நடத்துனர்களை மீண்டும் சேவையில் இணைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.மேலும், இதற்காக பொது சேவை ஆணையத்திடம் அனுமதி கோரியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.