2025-02-09
உலகில் 30 ஆண்டுகளில் பூமியின் நிலப்பரப்பில் 3ல் 2 பங்கு வறட்சி பகுதியாக மாறி விட்டது என ஐ.நா., அறிக்கை தெரிவித்துள்ளது. அண்டார்டிகாவைதவிர்த்து பூமியின் நிலப்பரப்பில், 40 சதவீதபகுதி, ஈரப்பதத்தில் இருந்து வறண்டதாகமாறிவிட்டன, அங்கு எதிர்காலத்தில்விவசாயம் சாத்தியமில்லை.பருவநிலையை பாதிக்கும் கார்பன்உள்ளிட்ட பசுமை இல்ல வாயு வெளியீட்டைகட்டுப்படுத்த தவறினால் மழைப்பொழிவு,தாவரங்களின் வளர்ச்சி, ஆவியாதலில்பாதிப்பை ஏற்படுத்திவறட்சியை அதிகரிக்கும் என அறிக்கை தெரிவிக்கிறது. 2020ன்படி 30% மக்கள் வறட்சி பகுதியில் வாழ்கின்றனர்.
2025-02-09
காற்றுமாசு காரணமாக இந்தியாவின் நெல், கோதுமை உற்பத்தியில் லட்சக்கணக்கான டன் அளவு குறைந்துள்ளது என ஆய்வு தெரிவித்துள்ளது. இதற்கு நிலக்கரி சுரங்கம் முக்கிய காரணமாகிறது. நைட்ரஸ் ஆக்சைடு வெளியீட்டில் 30% முதல் 40% பங்கு, நிலக்கரி உற்பத்தியால் ஏற்படுகிறது. இந்தியாவில் மின்சார உற்பத்தியில் பெருமளவு நிலக்கரி தான் பயன்படுத்தப்படுகிறது. நிலக்கரி சுரங்கம், அவை தொடர்பான மின்சார உற்பத்தி நிலையங்களில் இருந்து 100 கி.மீ., துாரம் வரை நெல், கோதுமை விளைச்சலில் இவை பாதிப்பை ஏற்படுத்துகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025-02-08
குளிர்ச்சியான ‘லா நினா’, அமெரிக்காவில் நிலவிய வழக்கத்திற்கு மாறான குளிர் உள்ளிட்டவை இருந்த போதும் ஜனவரி மாத வரலாற்றில் இந்த (2025) ஜனவரி மிக வெப்பமான மாதமாக மாறியுள்ளது என ஐரோப்பாவின் காபர்னிகஸ் பருவநிலை மாற்ற சேவை ஆய்வு தெரிவித்துள்ளது. இதற்கு முன் வெப்பமான ஜனவரியாக 2024 இருந்தது. கடந்தாண்டு ஜனவரியை விட இந்தாண்டு 0.9 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. கார்பன், மீத்தேன் உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்கள் வெளியீடு அதிகரிப்பே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
2025-02-08
‘ஹம்பேக்’ என்ற திமிங்கலம் மிக நீண்டதுாரத்துக்கு இடம் பெயர்ந்துள்ளது. இது இதுவரை பதிவான திமிங்கலங்களின் பயணத்தில் நீண்டதுாரமாக இருக்கலாம் என ஆய்வு தெரிவித்துள்ளது. இது 2017ல் பசிபிக் கடலில் கம்போடியாவில் தென்பட்டது. சில ண்டுக்குப்பின் 2022ல் இந்திய பெருங்கடலில் ஜான்ஜிபார் பகுதியில் இருப்பது கண்டறியப்பட்டது. இரண்டுக்குமான துாரம் 13 ஆயிரம் கி.மீ. பருவநிலை மாற்றத்தால் அதன் உணவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இந்தளவுக்கு பயணித்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
2025-02-07
சூரியனை பூமி சுற்றுவதால் இரவு, பகல் ஏற்படுகிறது. இந்நிலையில் உலகின் வட, தென் துருவ பகுதிகளில் உள்ள சில நாடுகளில்நள்ளிரவிலும் சூரியனை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. சூரியனை, பூமி சுற்றி வருகையில், அதன் அச்சில் 23.5 டிகிரி சாய்ந்திருப்பதே இந்த விந்தைக்கு காரணம். கனடாவின் சில பகுதிகள், அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம், கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, பின்லாந்து, நார்வே, ரஷ்யா, சுவீடன் ஆகிய நாடுகளில் ஜூன் – ஆகஸ்டில் (இடத்தை பொறுத்து) நள்ளிரவிலும் சூரியனை பார்க்க முடியும்.
2025-02-07
விமான நிலையம், ரயில் நிலையம், ஷாப்பிங் மால் என பல இடங்களிலும் ‘எஸ்கலேட்டர்’ எனும் நகரும் படிக்கட்டு பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் உலகின் சிறிய ‘எஸ்கலேட்டர்’ ஜப்பானில் பயன்பாட்டில் உள்ளது. இது உலக கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்று உள்ளது. இதன் உயரம் 2.8 அடி. ஐந்து படிகள் மட்டுமே உள்ளன.பயண நேரம் 6 வினாடி. அதே போல உலக கின்னஸ் சாதனை புத்தகத்தின் படி, நீளமான ‘எஸ்கலேட்டர்’ ஹாங்காங்கில் பயன்படுத்தப்படுகிறது. இதன் நீளம் 2624 அடி. […]
2025-02-05
ரயில் தண்டவாளத்தில் பயன்படுத்தும் ஜல்லி கற்களுக்கு ‘டிராக் பேல்லஸ்ட்’ என பெயர். 6 — 20 ‘இன்ச்’ உயரம் இக்கற்கள் கொட்டப்பட்டிருக்கும். இவை ரயில் ஓடும் போது ஏற்படும் அதிர்வை தாங்கி, தண்டவாளம் நகராமல் தடுக்கிறது. ரயில் பாதையில் தாவரங்கள் வளர்வதை தடுக்கிறது. தண்ணீரை தேங்க விடாமல் வழிந்தோடவும் செய்கிறது. இதனால் மண் அரிப்பு தவிர்க்கப்படுகிறது. தண்டவாளத்தை இணைக்க நீளமான கான்கிரீட் குறுக்கு மட்டங்களும் ரயில் பாதைகளில் பயன்படுகின்றன. இதற்கு ‘ஸ்லீப்பர்’ என பெயர். இவை தண்டவாளம் […]
2025-02-05
சர்வதேச விண்வெளி மையம் 1998ல் அமைக்கப்பட்டது. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, கனடா, ஜப்பான் விண்வெளி ஆய்வு மையங்கள் இணைந்து இதை உருவாக்கின. 1998 டிச. 7ல் ஜெரி ரோஸ், ஜேம்ஸ் நியூமேன் இணைந்து முதன் முறையாக விண்வெளி மையத்தில் இருந்து வெளியே வந்து விண்வெளி நடை (7 மணி, 21 நிமிடம்) மேற்கொண்டனர். இதுவரை 274 விண்வெளி நடை (அமெரிக்கா 201, ரஷ்யா 73) மேற்கொள்ளப்பட்டது. அதிகபட்சமாக 2007ல் 20 முறை, குறைந்தபட்சமாக 1999ல் ஒரு விண்வெளி […]
2025-02-04
சென்னை: தரை வழி, கடல், வான்வெளி போக்குவரத்துக்கு வழிகாட்டும் ‘என்.வி.எஸ்., – 02’ செயற்கைக் கோளை இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி., – எப் 15 ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தியது. இதையடுத்து ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து 100வது ராக்கெட்டை இஸ்ரோ செலுத்தி ‘செஞ்சுரி’ சாதனை படைத்துள்ளது. நம் நாட்டின் தகவல் தொடர்பு, புவி கண்காணிப்பு உள்ளிட்ட சேவைகளுக்கு பயன்படும் செயற்கைக் கோளை வடிவமைத்து பி.எஸ்.எல்.வி., – ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட் உதவியுடன் ‘இஸ்ரோ’ […]
2025-02-04
இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) சமீபத்தில் நுாறாவது ராக்கெட் ஏவி சாதித்தது. 1975 ஏப்.19ல் தன் முதல் செயற்கைக்கோளை (ஆர்யபட்டா), ரஷ்ய ராக்கெட்டில் விண்ணில் செலுத்தியது. 1979 ஆக.10ல் முதல் ராக்கெட் பயணத்தை தொடங்கியது. பெயர் ‘எஸ்.எல்.வி.-3இ1’. இதில் ‘ரோஹிணி’ செயற்கைக்கோளை ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ஏவியது. ஆனால் இது தோல்வியில் முடிந்தது. இதன்பின் ஏ.எஸ்.எல்.வி., பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி.,எஸ்.எஸ்.எல்.வி., என பல்வேறு ராக்கெட்டுகளை தயாரித்து விண்ணில் செலுத்தி வருகிறது.
2025-02-02
நாசாவின் ‘சன் ஆப் கான்கோர்டு’ விமானத்தை விட வேகமாக செல்லும் ‘சூப்பர்சானிக்’ விமானத்தை சீனாவின் ‘ஸ்பேஸ் டிரான்ஸ்போர்டேசன்’ நிறுவனம் சோதனை செய்துள்ளது. வேகம் மணிக்கு 4900 கி.மீ. இது ஒலியின் வேகத்தை விட நான்கு மடங்கு அதிகம். அதே போல ‘சன் ஆப் கான்கோர்டு’ விமானத்தை விட 3 மடங்கு அதிகம். இது 65,500 அடி உயரத்தில் பறக்கும். இதில் சீனாவின் பீஜிங் – அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு, 2 மணி நேரத்தில் செல்லலாம். 2027 முதல் விமானம் […]
2025-02-02
சூரியனில் இருந்து நான்காவதாக உள்ள செவ்வாய் கோள் பற்றி விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் செவ்வாய் கோளில் உள்ள ஆயிரக்கணக்கான மலைகள், குன்றுகளில் களிமண் கனிமங்கள்உள்ளன. இவை பல கோடி ஆண்டுக்கு முன் அதன் மேற்பரப்பில் தண்ணீர் இருந்த போது உருவாகின என லண்டனின் இயற்கை வரலாற்று மியூசியம் ஆய்வு தெரிவித்துள்ளது. இக்கண்டுபிடிப்பு அங்கு நீர்நிலைகள்இருந்ததற்கான கூடுதல் ஆதாரத்தை வழங்குகிறது செவ்வாய் கோளின் வரலாற்றில் அதிக வெப்பம், ஈரம் இருந்திருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.