வெளிநாட்டு செய்திகள்

வெளிநாட்டு செய்திகள்

img

2025-01-21

ட்ரம்பின் மனைவியே சட்டவிரோத புலம்பெயர்ந்தோர்தான்… மனைவியை நாடுகடத்துவாரா?

புலம்பெயர்ந்தோருக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ட்ரம்ப்.ஆனால், அவரது மனைவியான மெலானியாவே ஒருவகையில் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர்தான்.அப்படியானால், சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் அனைவரையும் மொத்தமாக நாடுகடத்தப்போவதாகக் கூறும் ட்ரம்ப், தனது மனைவி மெலானியா ட்ரம்பை நாடுகடத்துவாரா? மெலானியா, மத்திய ஐரோப்பாவிலுள்ள ஸ்லோவேனியா என்னும் நாட்டில் பிறந்தவர்.1996ஆம் ஆண்டு புலம்பெயர்தல் விதியை மெலானியா மீறியதற்கு ஆதாரமான ஆவணங்கள் The Associated Press என்னும் ஊடகத்துக்கு கிடைத்துள்ளன.மெலானியா சட்டப்படி வெறும் ஆறு மாதங்கள் அமெரிக்காவில் தங்கும் வகையில், […]

img

2025-01-21

ரூ.10,200 கோடிக்கு பினாகா வகை ராக்கெட்கள் கொள்முதல் செய்ய இந்திய ராணுவம் ஒப்பந்தம்

ரூ.10,200 கோடிக்கு பினாகா வகை ராக்கெட்கள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை இந்திய ராணுவம் இறுதி செய்துள்ளது. இந்த நிதியாண்டில் இந்திய ராணுவத்துக்கு ரூ.10,200 கோடிக்கு பினாகா வகை ராக்கெட்கள் (Pinaka rocket system) கொள்முதல் செய்யப்பட உள்ளன.இந்த வளர்ச்சியானது இராணுவத்தின் உள்நாட்டு பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. ஏனெனில் அது பினாகா அமைப்பை அதன் படைப்பிரிவுகளில் முழுமையாகப் பயன்படுத்தப்படவுள்ளது. இதுகுறித்து ராணுவ தளபதி உபேந்திர துவிவேதி கூறுகையில், “நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் மார்ச் 31-ம் திகதி […]

img

2025-01-21

பிரான்சின் கோழி இறைச்சி மீதான இறக்குமதி தடையை தளர்த்திய 2 முக்கிய நாடுகள்

பிரான்ஸ் நாட்டிலிருந்து கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்கா மற்றும் கனடா தளர்த்தியுள்ளது.2023 அக்டோபரில் பிரான்ஸ் அரசு வாத்துக்களுக்கு பறவைக்காய்ச்சல் தடுப்பூசி வழங்க முடிவெடுத்தது.இதையடுத்து, அமெரிக்கா மற்றும் கனடா பிரான்சில் இருந்து சில கோழி இறைச்சியை (poultry) இறக்குமதி செய்ய தடை விதித்திருந்தது.தற்போது, அமெரிக்கா மற்றும் கனடா அந்த தடைகளை தளர்த்தியுள்ளதாக பிரான்ஸ் வேளாண்மை அமைச்சகம் அறிவித்துள்ளது. பறவைக்காய்ச்சல் (HPAI) என்பது உலகளவில் கோழிப்பண்ணைமீதான தீவிர தாக்கத்தைக் கொண்ட வைரஸ் நோயாகும்.பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா […]

img

2025-01-21

அமெரிக்க எல்லையில் தேசிய அவசரநிலையை அறிவிக்க ட்ரம்ப் முடிவு

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப், எல்லையில் தேசிய அவசரநிலையை அறிவிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தின் கொள்கைகளை விரைவாக மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்ட நிர்வாக உத்தரவுகளின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி பொறுப்புக்கு வந்ததும் முதல் நாளிலேயே 100 நிர்வாக உத்தரவுகளுக்கு அவர் கையெழுத்திடுவார் என்றே நம்பப்படுகிறது. தனது திட்டங்களின் ஒரு பகுதியாக, அமெரிக்க மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவதற்கான கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்கவும் ட்ரம்ப் உத்தரவிடுவார்.தேர்தல் […]

img

2025-01-21

உலகம் மொத்தம் சர்ச்சையை ஏற்படுத்திய எலோன் மஸ்கின் அந்த செயல்

டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு விழா கொண்டாட்டங்களின் போது பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்க் தொடர்ச்சியாக பாசிச பாணி வணக்கங்களைச் சொல்லி சர்ச்சையில் சிக்கியுள்ளார். வாஷிங்டனில் அமைந்துள்ள கேபிடல் ஒன் அரங்கத்தில் திரண்டிருந்த ட்ரம்ப் ஆதரவாளர்களிடம் உரையாற்றிய எலோன் மஸ்க், இப்படியான ஒரு நிகழ்வை சாத்தியமாக்கியதற்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் என தொடங்கினார். தொடர்ந்து தனது வலது கையை மார்பில் அறைந்தார். விரல்களை ஒன்றாக இணைத்து, உள்ளங்கையை கீழ்நோக்கி வைத்து, வலது கையை நீட்டி முழக்கமிட்டார். எல்லொன் மஸ்கின் […]

img

2025-01-21

பணயக்கைதிகள் விடுவிப்பு அடுத்து எப்போது… ஹமாஸ் படைகள் வெளியிட்ட தகவல்

காஸாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை அடுத்த சனிக்கிழமை விடுவிப்பதாக ஹமாஸ் படைகள் தெரிவித்துள்ளது. எதிர்பார்த்ததை விட ஒரு நாள் தாமதமாக அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று ஹமாஸ் படைகளின் அதிகாரி ஒருவர் கூறிய நிலையிலேயே தற்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முன்னெடுக்கப்பட்டுள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, வரும் வாரங்களில் 90க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் படைகள் ஒப்புக்கொண்டுள்ளது.சுமார் 15 மாதங்களாக பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் முன்னெடுத்த கொலைவெறித் தாக்குதல் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. ஹமாஸ் […]

img

2025-01-21

போர்களை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து ட்ரம்ப் வழங்கியுள்ள உறுதி

மத்திய கிழக்கு போர் மற்றும் ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,“அமெரிக்க மண்ணில் செயற்படும் சட்டவிரோத அந்நிய கும்பல்களையும் புலம்பெயர் குற்றவாளிகளையும் நான் வெளியேற்றுவேன். அமைதிக்கான முதல்படியாக மத்திய கிழக்கில் நாம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அடைந்துள்ளோம். கடந்த நவம்பரில் நாம் வெற்றிபெற்றதன் மூலமே இது சாத்தியமானது. நான் அமெரிக்க […]

img

2025-01-21

அமெரிக்க பிறப்புரிமை தொடர்பில் ட்ரம்ப்பின் தீர்மானம்! எதிர்ப்பார்க்கப்படும் அடுத்த கட்ட நகர்வுகள்

அமெரிக்க மண்ணில் பிறக்கும் அனைவருக்கும் அமெரிக்க பிறப்புரிமை வழங்கும் சட்டத்தை மாற்றியமைக்க உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.இந்த சட்டம் மிகவும் அபத்தமானது என ட்ரம்ப் விமர்சித்திருந்தார்.குறித்த பிறப்புரிமை சட்டம் அமெரிக்க அரசியல் சாசன சட்டத்தால் வழங்கப்பட்டுள்ளதால், ஒரு அரச உத்தரவின் மூலம் அதனை நீக்குவது எளிதான விடயமல்ல என கூறப்படுகின்றது. அத்துடன், போதைப் பொருள் கடத்தல் குழுக்களை “வெளிநாட்டு தீவிரவாத அமைப்பு” என்று டிரம்ப் வகைப்படுத்த போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்மூலம், போதைப் பொருள் கடத்தல் குழுக்கள், […]

img

2025-01-21

ட்ரம்ப்பின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட பிரபலங்கள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பதவியேற்பு விழாவில் அரசியல் தலைவர்கள், தொழில்நுட்ப நிர்வாகிகள், வெளிநாட்டு தலைவர்கள், இணைய பிரமுகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.2021இல் பைடனின் பதவியேற்பு விழாவை அப்போதைய தேர்தலில் தோல்வியடையந்த ட்ரம்ப் புறக்கணித்திருந்தார். இந்நிலையில், ட்ரம்ப்பின் பதவியேற்பு விழாவில் பைடன் கலந்துகொண்டதோடு முன்னாள் ஜனாதிபதிகளான பரக் ஒபாமா, ஜார்ஜ் டபிள்யூ. புஷ் மற்றும் பில் கிளிண்டன் […]

img

2025-01-20

டிரம்ப் இன்று பதவியேற்பு: தேர்தலில் தோற்ற கமலா ஹாரிஸ் இனி என்ன செய்யப் போகிறார்?

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பிடம் கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்து சரியாக இரண்டு மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. டிரம்ப் இன்று அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கிறார். அமெரிக்காவின் ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என்று டிரம்பை கமலா ஹாரிஸ் விமர்சனம் செய்திருந்தார். அமெரிக்காவின் வயதான அதிபருக்கு மாற்றாக தனது அதிபர் தேர்தல் பயணத்தை ஆரம்பித்து, ஜனநாயகக் கட்சியின் தலைவராக ஹாரிஸ் மாறுவதை கண்ட தேர்தலின் முடிவு இது. அவரின் குறுகிய கால பிரசாரம் அவருடைய கட்சியினருக்கு ஒரு நம்பிக்கையை அளித்தது. […]

img

2025-01-20

நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் 70க்கும் மேற்பட்டோர் பலி

நைஜீரியாவில் மோசமான சாலைகளால் பெட்ரோல் டேங்கர் லாரிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றன. நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவையும் வடக்கு நகரமான கடுனா நகருடன் இணைக்கும் சந்திப்பில் 60,000 லிட்டர் பெட்ரோலுடன் சென்ற கொள்கலன் லாரி தடம்புரண்டு விபத்திற்குள்ளானது. கொள்கலன் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதை அறிந்த அப்பகுதி மக்கள், பெட்ரோலுக்காக முண்டியடித்துச் சென்றனர். இந்தச் சமயத்தில், லாரி கவிழ்ந்து வெடித்து சிதறியது. பெட்ரோலைச் சேகரிப்பதற்காகக் கூடியிருந்த சுமார் 70-க்கும் மேற்பட்டோரும் இந்த விபத்தில் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. […]

img

2025-01-20

டொனால்டு டிரம்புடன் முகேஷ் அம்பானி, நீடா அம்பானி சந்திப்பு

டொனால்டு டிரம்பை முகேஷ் அம்பானி, நீடா அம்பானி சந்தித்து பேசினர். வாஷிங்டன், அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் அமோக வெற்றிப் பெற்றார். அவர் இன்று (திங்கட்கிழமை) அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த விழாவில் கலந்துகொள்ள உலக தலைவர்கள் பலருக்கும், பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவின் […]