2025-01-02
ஒவ்வொரு மனிதனும் இரட்டை கதைகளோடு வாழ்கிறான். ஒன்று அவன் வாழும் கதை. மற்றொன்று அவன் வாழ நினைக்கும் கதை. நா முத்துக்குமார்
2025-01-02
தீயைப் படித்து தெரிந்துக் கொள்வதைவிட, தீண்டி காயம் பெறு. அந்த அனுபவம் எப்போதும் சுட்டுக்கொண்டே இருக்கும். நா முத்துக்குமார்
2024-12-28
வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது சிரிப்புச் சத்தம் கேட்கும்போதெல்லாம் அது திறந்து கொள்கிறது வாழ்வின்மீது இயற்கை தெளித்த வாசனைத் தைலம் சிரிப்பு எந்த உதடும் பேசத் தெரிந்த சர்வதேச மொழி சிரிப்பு உதடுகளின் தொழில்கள் ஆறு சிரித்தல் முத்தமிடல் உண்ணால் உறிஞ்சல் உச்சரித்தல் இசைத்தல் சிரிக்காத உதட்டுக்குப் பிற்சொன்ன ஐந்தும் இருந்தென்ன? தொலைந்தென்ன? தருவோன் பெறுவோன் இருவர்க்கும் இழப்பில்லாத அதிசய தானம்தானே சிரிப்பு சிரிக்கத் திறக்கும் உதடுகள் வழியே துன்பம் வெளியேறிவிடுகிறது ஒவ்வொருமுறை சிரிக்கும்போதும் இருதயம் ஒட்டடையடிக்கப்படுகிறது சிரித்துச் […]
2024-12-28
நட்பு என்பது சூரியன் போல் எல்லா நாளும் பூரணமாய் இருக்கும் நட்பு என்பது கடல் அலை போல் என்றும் ஓயாமல் அலைந்து வரும் நட்பு என்பது அக்னி போல் எல்லா மாசுகளையும் அழித்து விடும் நட்பு என்பது தண்ணீர் போல் எதில் ஊற்றினாலும் ஓரே மட்டமாய் இருக்கும் நட்பு என்பது நிலம் போல் எல்லாவற்றையும் பொறுமையாய் தாங்கிக் கொள்ளும் நட்பு என்பது காற்றைப் போல் எல்லா இடத்திலும் நிறைந்து இருக்கும் வைரமுத்து