அறிவுபூர்வமான , நம்பகமான . தனித்துவமான , ஒளி ,
2025-02-04
காலநிலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.இதற்கமைய நாட்டில் பல பகுதிகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் […]
2025-02-09
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, பாகிஸ்தானுடன் முத்தரப்பு ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவுக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. 38வது ஓவரின் போது, ரச்சின் ரவீந்திரா பந்தை கேட்ச் பிடிக்க ஓடி வந்தார். ஆனால் பந்தை சரியாக பார்க்க முடியாததால் அவரது முகத்தில் பந்து தாக்கியது. அதனால் ரத்தம் வடிய அவர் கீழே சாய்ந்தார். பின்னர் […]
2025-02-09
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான பிட்ச் மற்றும் வானிலை பற்றிய தகவல்களை இங்கே பார்க்கலாம். டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கை தேர்வு செய்யுமா? அல்லது பந்துவீச்சை தேர்வு செய்யுமா? என்றும் பார்க்கலாம். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ள இரண்டாவது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக் நகரில், பாரபத்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. கட்டாக்கில் பொதுவாக வானிலை தெளிவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த மைதானத்தில் […]
2025-02-09
கரீபியன் கடலில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.கேமன் தீவுகளுக்கு தென்மேற்கே 209 கி.மீ தொலைவில் கரீபியன் கடலில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கேமன் தீவுகள், ஜமைக்கா, கொலம்பியா, போர்ட்டோ ரிக்கோ உள்ளிட்ட கரீபியன் கடலை அண்மித்த தீவுகள் மற்றும் நாடுகளுக்கு சுனாமி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2025-02-09
பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் மகன் ஹம்சா ஷெபாஸ். பஞ்சாப் மாகாண முதல்-மந்திரியாக இருந்த அவர் கடந்த 2018ல் சர்க்கரை ஆலை ஒப்பந்தத்தை தனது தம்பி சுலேமானுக்கு வழங்கினார்.இதன்மூலம் சுமார் ரூ.6 கோடி வரை மோசடி நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மற்றும் ஹம்சா ஷெபாஸ் ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். எனினும் இந்த வழக்கின் விசாரணை லாகூர் கோர்ட்டில் தொடர்ந்து […]
2025-02-09
தற்காலிக போர் நிறுத்தம் தொடர்ந்து நீடிப்பதால், காசா பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் ஒப்படைத்துள்ளது.எலி ஷராபி, ஓஹத் பென் அமி மற்றும் ஓர் லெவி ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. ஜனவரி 19 அன்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததிலிருந்து விடுவிக்கப்பட்ட 18 பணயக்கைதிகளுடன் அவர்கள் இணைகிறார்கள்.பணயக்கைதிகள் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அனுப்பப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, மனிதாபிமான அமைப்பின் இரண்டு ஊழியர்கள் காசாவில் மேடையில் தோன்றி ஹமாஸ் அதிகாரியுடன் ஆவணங்களில் கையெழுத்திட்டனர்.
2025-02-09
சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 10 வீடுகள் மண்ணுள் புதையுண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.குறித்த வீடுகளில் வசித்து வந்த சுமார் 30 பேரை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜுன்லியன் கவுண்டியில் உள்ள ஒரு கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, அவசரகால மேலாண்மை அமைச்சகம் தீயணைப்பு வீரர்கள் உட்பட நூற்றுக்கணக்கான மீட்புப் பணியாளர்களை அனுப்பியது.இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டனர், மேலும் சுமார் 200 பேர் இடம்பெயர்ந்தனர் என்று மாநில ஒளிபரப்பாளர் தெரிவித்துள்ளார்.
2025-02-09
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைக் கண்டிக்கும் வகையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை ‘முட்டாள்’ என விமர்சித்த ரஷ்ய பாடகர் தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.ரஷ்ய இசைக்கலைஞரும் வானொலி தொகுப்பாளருமான 58 வயதான வாடிம் ஸ்ட்ரோய்கின் என்பவரே இவ்வாறு உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இவர் கடந்த புதன்கிழமை காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது ஜன்னலிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகின்றது.மேலும் உக்ரைன் இராணுவத்தை ஆதரித்தது […]
2025-02-09
கனடாவுக்கு கல்வி கற்க சென்ற 50 ஆயிரம் மாணவர்கள் காணாமல் போனதாக வெளிவந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கனடாவில் கல்வி பயில 50,000 மாணவர்கள் விசா பெற்ற நிலையில், எந்தக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களிலும் அவர்கள் சேரவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளன. இவ்வாறு காணாமல்போனவர்களில் 5.4% இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல் தெரிவிக்கிறது. பல்வேறு நாடுகளில் இருந்து கல்வி பயில்வதற்காக கனடா விசா பெற்று கனடாவுக்கு வந்த மாணவர்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவர்களில் சீனா, ஈரான், பிலிப்பைன்ஸ் […]
2025-02-09
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனடா மற்றும் மெக்ஸிகோவை குறிவைத்து புதிய வரிகளை விதிக்க மிரட்டிய நிலையில், கனடா தனது வர்த்தக உறவுகளை ஐரோப்பிய ஒன்றியத்துடன் (EU) மேலும் வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது.இது தொடர்பாக கனடாவின் வர்த்தக அமைச்சர் மேரி என் (Mary Ng), ஜெனீவாவில் உலக வர்த்தக அமைப்பு (WTO) தலைவர் ந்கோஸி ஒகோஞ்சோ-இவேலா (Ngozi Okonjo-Iweala) உடன் சந்தித்து பேசியுள்ளார்.பின்னர், ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக பிரதிநிதி மரோஸ் செப்கோவிச் (Maros Sefcovic) உடன் அவர் ஆலோசனை […]
2025-02-09
2025-ஆம் ஆண்டில் ஐரோப்பாவிற்கு சுற்றுலா செல்ல திட்டமிடுகிறீர்களா? அப்படியென்றால் எந்த ஐரோப்பிய நாட்டில் Schengen விசாவை எளிதாக பெறமுடியும் என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.சில நாடுகளில் Schengen விசாவை பெறுவதற்கான செயல்முறை சிக்கலானதாக இருக்கலாம். ஆனால், சில நாடுகள் விசா வழங்குவதில் அதிக நன்மை வழங்குகின்றன.ரோம், சுவிட்சர்லாந்து, கிரேக்கம் போன்ற இடங்களை சுற்றிப் பார்க்க விரும்பினால், சரியான நாட்டில் விண்ணப்பிக்க வேண்டும். Schengen விசா மூலம் 29 ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லலாம். ஆனால், ஒவ்வொரு நாட்டின் நிராகரிப்பு விகிதம் […]
2025-02-09
துபாய்க்கு பயணம் செய்யும் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தலை பிரித்தானிய வெளிநாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ளது.பிரித்தானியாவில் இருந்து துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரத்தின் (UAE) பிற பகுதிகளுக்கு பயணம் செய்ய நினைப்போர் ரமலான் மாதத்தில் தங்கள் நடத்தை குறித்து கவனம் செலுத்த வேண்டும் என வெளிநாட்டு அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. ரமலான் மாதம் உலகம் முழுவதும் இஸ்லாமியர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. இது பெரும்பாலும் பகல்பொழுதில் நோன்பு நோற்க, பிரார்த்தனை, மனமார்ந்த சிந்தனை மற்றும் சமூக ஒற்றுமையை முக்கியமாகக் கொண்டுள்ளது.இந்த […]
2025-02-09
ஜோ பைடனுக்குப் பிறகு, அவரது வெளிவிவகார அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஆகியோரின் பாதுகாப்பு நடவடிக்கைகளை ரத்து செய்துள்ளார். ஜனாதிபதி ஜோ பைடனுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை ரத்து செய்ததுடன், தினசரி உளவுத்துறை தரவுகளை அணுகும் அனுமதியையும் டொனால்டு ட்ரம்ப் ரத்து செய்திருந்தார். அத்துடன் ஜோ பைடனின் துணை அட்டர்னி ஜெனரல் லிசா மொனாக்கோவுக்கான பாதுகாப்பையும் ரத்து செய்துள்ளார். இவரே 2021ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 6ஆம் திகதி ஆட்சிக் […]